இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் இந்நாட்டின் வர்த்தக கடற்படை சமூகத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "நாவிகாயா" (Navikaya) சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இணையவழி மூலம் பதிவு செய்வதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி கௌரவ உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேசிய நிகழ்வு, 2026 ஜூன் 25 ஆம் திகதி அமையும் சர்வதேச கடலோடிகள் தினத்திற்கு (International Day of the Seafarer) இணையாக, அன்றைய தினம் மு.ப 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப (BMICH - Orchid Hall) வளாகத்தில் நடைபெறும்.
எமது சபையுடன் இணைந்த அகில இலங்கை ரீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன், மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் (திங்கள், செவ்வாய், புதன்) நில்லம்பே பயிற்சி நிலையம், (சமூக வலுவூட்டல் அபிவிருத்தி திணைக்களம், வாரியகல, நில்லம்பே, பேராதனை) என்னுமிடத்தில் நடாத்தப்பட்டது.