“நாவிகயா” சமூகப் பாதுகாப்புத் திட்டம்
நாவிகயா திட்டம் பற்றி
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கடல்சார் தொழிலாளர் மாநாட்டு விதிகளுக்கு அமைவாக, 18-59 வயதுக்குட்பட்ட வணிக கடலோடிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிகக் கப்பல் சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக, கடல்வழி போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் கடலோடிகளுக்காக இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 'நாவிகயா' சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்புரிமை பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை 'நாவிகயா' சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நிர்வகிக்கிறது மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தேவையான தலையீடுகளை வணிகக் கப்பல் செயலகம் மேற்கொள்கிறது.
உங்களுக்கு உரித்தான விசேட நன்மைகள்:
ஓய்வூதிய நன்மைகள்
- 60 வயது முதல் வாழ்நாள் முழுவதும் மாதாந்த ஓய்வூதியம்.
- முதிர்வுத் திகதியன்றுள்ள கணக்கு மீதிக்கு ஏற்ப ஓய்வூதியம்.
உங்களுக்குப் பின்னரும் குடும்பம் பாதுகாப்பானது
- நீங்கள் ஓய்வூதியம் பெறுபவராக இருக்கும்போது இறக்க நேரிட்டால், வாழ்க்கைத்துணைக்கு அல்லது பெயரிடப்பட்ட வாரிசுக்கு ஓய்வூதிய உரிமை.
- ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னர் இறக்க நேரிட்டால், இறுதிச் சடங்குச் செலவுகளுக்காக ரூபா 100,000 உடன் வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதிய உரிமை அல்லது செலுத்திய பணத்தை முதலீட்டு வருமானத்துடன் பெற்றுக்கொள்ளும் வசதி.
உங்கள் இளம் பிள்ளையின் எதிர்கால நல்வாழ்விற்கான நிதி உதவி
- பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட எந்தவொரு நிதித் தேவைக்கும் நிதியுதவி பெறுவதற்கான மேலதிக நன்மைகள்.
சவால்களின் முன் தளராத பாதுகாப்பு
- முழுமையான இயலாமையின் போது, தவணை செலுத்துவதிலிருந்து நீங்கள் விலக்கப்படுகிறீர்கள்! அன்றிலிருந்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் மற்றும் ரூ. 500,000 பணிக்கொடை.
- பகுதி அளவிலான இயலாமையின் போது, ரூ. 100,000 பணிக்கொடை.
உறுப்பினர் தவணைப் பணத்தைச் செலுத்துதல்:
உங்கள் சமூகப் பாதுகாப்பு உறுப்பினர் தவணைத் தொகையை, சேவைக் காலத்தைப் பொறுத்து உங்கள் மாதாந்தச் சம்பளத்திலிருந்து அல்லது உங்கள் பிரதிநிதி மூலம் நேரடியாகச் செலுத்துவதற்கு உங்கள் தொழில் தருநர் ஏற்பாடு செய்வார்.
அதற்கிணங்க, தொழில் தருநரின் பங்களிப்பு பின்வருமாறு செலுத்தப்படும்:
- கடலோடிகளுக்கு: மாதத்திற்கு 40 அமெரிக்க டொலர்கள்
- அதிகாரிகளுக்கு: மாதத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள்
சம்பளம் மூலம் செலுத்தும் போது, உங்கள் வசதிக்கேற்ப 2 பங்களிப்பு செலுத்தும் முறைகள்.
தொழில் தருநர் உரிய பங்களிப்பை உங்களது மாதாந்தச் சம்பளத்துடன் சேர்த்துச் செலுத்தும் சந்தர்ப்பங்களில், கீழ்க்காணும் இரண்டு முறைகளில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.
- முறை 1: சேவைக் காலத்தில் மாத்திரம் செலுத்துதல்
நீங்கள் வேலை செய்யும் காலத்தில் மாதத்திற்கு 40 அமெரிக்க டொலர்கள் வீதம் செலுத்துதல் (அதிகாரிகளுக்கு 50 அமெரிக்க டொலர்கள்). - முறை 2: ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக செலுத்துதல்
உங்கள் விடுமுறைக் காலத்தையும் சேர்த்து, ஆண்டின் 12 மாதங்களும் தொடர்ச்சியாக மாதத்திற்கு 20 அமெரிக்க டொலர்கள் வீதம் செலுத்துதல் (அதிகாரிகளுக்கு 25 அமெரிக்க டொலர்கள்).
இது பணம் செலுத்தும் திகதியில் நிலவும் (இலங்கை மத்திய வங்கியால் நாளாந்தம் வெளியிடப்படும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை) பரிமாற்ற வீதத்தின் படி இலங்கை ரூபாயிலும் (LKR) செலுத்தப்படலாம்.
உங்களது பங்களிப்புக் கணக்கை பேணுதல் மற்றும் நன்மைகளை வழங்குதல் என்பன இலங்கை ரூபாயில் (LKR) மேற்கொள்ளப்படும்.
உங்களுக்கு அதிக ஓய்வூதியம் மற்றும் அதிக நன்மைகள் தேவைப்பட்டால், உங்களது சொந்தப் பணத்திலிருந்து மேலதிக பங்களிப்பைச் செலுத்தி இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வசதியும் உள்ளது.
தவணைத் தொகையைச் செலுத்துவதற்கு உங்களது தேவைக்கேற்ப நெகிழ்வான பல தெரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தவணைத் தொகையை கணித்தல்
உங்களது வயது மற்றும் உங்களுக்குச் செலுத்தக்கூடிய பங்களிப்புத் தொகையின்படி கிடைக்கும் சரியான ஓய்வூதியத்தைக் கணிக்க, ஒன்லைன் தவணைக் கணிப்பானைப் பயன்படுத்தவும்.
கணினியமைப்பிற்குள் நுழைதல்
உறுப்புரிமையைப் பெறுவதற்கு SSB MIS Public Enrollment கணினியமைப்பிற்குள் நுழையவும்.